"சம்பவம்னா இப்டி இருக்கணும்".. சைகை காட்டிய வங்காளதேச வீரர்.. அடுத்த பந்திலேயே கோலி, சிராஜ் கொடுத்த தரமான பதிலடி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Dec 15, 2022 08:40 PM

நியூசிலாந்து தொடரை முடித்த கையோடு வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அங்கே தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Siraj and Virat Kohli reaction after Litton das get out

Also Read | தனக்காக வாழ்க்கையை தியாகம் செய்த அம்மா.. மறுமணம் செய்து அழகு பார்த்த மகள்.. மனதை உருக வைக்கும் காரணம்!!

இதற்கு முன்பாக, இந்தியா மற்றும் வங்காளதேச கிரிக்கெட் அணிகள், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி இருந்தது.

இதன் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வங்காளதேச அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. தொடர்ந்து நடந்த 3 ஆவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக, இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதல் போட்டியில், இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்ய அதன்படி ஆடிய இந்திய அணி, கே எல் ராகுல், கோலி உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்திருந்தது.

Siraj and Virat Kohli reaction after Litton das get out

இதனைத் தொடர்ந்து, புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயாஸ் 86 ரன்களும் எடுத்து அவுட்டாக, கடைசி கட்டத்தில் அஸ்வின் மற்றும் குல்தீப் ஆகியோரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதில், அஸ்வின் 58 ரன்கள் எடுத்து அவுட்டாக, இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகி இருந்தது.

Siraj and Virat Kohli reaction after Litton das get out

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வங்காளதேச வீரர் அவுட்டானதும் விராட் கோலி மற்றும் சிராஜ் ஆகியோர் செய்த விஷயம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Siraj and Virat Kohli reaction after Litton das get out

வங்காளதேச வீரர் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்திருந்தார். அந்த சமயத்தில், சிராஜ் பந்து வீச வர, அவருக்கும் லிட்டன் தாஸுக்கும் இடையே வாக்குவாதம் உருவானதாக தெரிகிறது. அப்போது சிராஜ் சில கருத்துக்களை தெரிவிக்க, அது தன் காதில் எதுவும் கேட்கவில்லை என்பது போல சைகை காட்டினார் லிட்டன் தாஸ். இதற்கடுத்த பந்தில், லிட்டன் தாஸ் போல்டு அவுட்டாக, உடனடியாக சிராஜும் தனது வாயில் விரல் வைத்து சத்தம் போடாமல் இருக்கும் படி சைகை காட்டினார்.

மறுபக்கம், கோலி கூட தனது பாணியில் லிட்டன் தாஸ் செய்ததை மீண்டும் செய்து காட்டி, லிட்டன் தாஸை வழியனுப்பி வைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | 8 வருசத்துக்கு முன்னாடி மாயமான மலேசிய விமானம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்.!!

Tags : #CRICKET #SIRAJ #VIRAT KOHLI #LITTON DAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Siraj and Virat Kohli reaction after Litton das get out | Sports News.