"விராட், ரோகித்தால மட்டும் உலக கோப்பைய ஜெயிக்கவே முடியாது".. ஸ்ட்ராங்கா கபில் தேவ் சொன்ன வார்த்தை!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவங்காளதேச சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், ஒரு நாள் தொடரை இழந்திருந்தது.
Also Read | "கால் வைக்குற இடம் எல்லாம் கண்ணி வெடி.. வேற யாராவது இருந்தா..".. Live-ல் மனமுடைந்து பேசிய TTF வாசன்!!
இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது. மூன்று டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தி உள்ளது. கடைசி பந்து வரை இந்த போட்டி சென்றிருந்த நிலையில், இந்திய அணி அசத்தலாக விக்கெட் எடுத்து வெற்றி பெற்றிருந்தது. டி 20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அதே போல விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட வீரர்களுக்கும் இந்த டி 20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஜாம்பவான் கபில் தேவ், இந்திய கிரிக்கெட் குறித்து தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இந்த தொடர் குறித்து பேசியுள்ள கபில் தேவ், "2023 உலக கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அல்லது 2 - 3 தனிப்பட்ட வீரர்களை நம்பி பயனில்லை. உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் 2 - 3 வீரர்கள் உலக கோப்பையை வெல்வார்கள் என நீங்கள் நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. உங்கள் அணியை நீங்கள் நம்ப வேண்டும். அப்படி ஒரு அணி இருக்கிறதா என உங்களுக்கு நீங்களே கேட்டு கொள்ள வேண்டும். அதற்கு மேட்ச் வின்னர்கள் அணியில் இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
எப்போதும் 2 அல்லது 3 வீரர்கள் அணியின் தூண்களாக தங்களை உருவாக்கி கொண்டுள்ளார்கள். ஆனால் இந்த போக்கை உடைத்து 5 அல்லது 6 மேட்ச் வின்னர்களை உருவாக்க வேண்டும். அதனால் தான் ரோகித் மற்றும் கோலியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. தங்களின் ஒவ்வொரு பொறுப்புகளையும் நிறைவேற்றும் வீரர்கள் தேவை. இளைஞர்கள் முன்வந்து இது எங்கள் நேரம் என சொல்ல வேண்டும்" என கூறி உள்ளார்.