"சந்திரமுகியா மாறுன கோலிய பாத்தேன்".. வின்னிங் ரன் அடிக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சு??.. அஸ்வின் பகிர்ந்த தகவல்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தி இருந்தது இந்திய அணி.

160 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருந்தது. ஆனால், கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டனர். இக்கட்டான சூழலில் சிக்ஸர்களை கோலி பறக்க விட, கடைசி பந்தல் அஸ்வின் உதவியுடன் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க போட்டிகளில் ஒன்று என்றும் இதனை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், கோலி ஃபார்மையும் பலர் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடைசி தருணத்தில் நடந்தது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதில் பேசும் அஸ்வின், "விராட் கோலிக்குள் என்ன புகுந்து விட்டது என்றே தெரியவில்லை. ஆனால் ஏதோ புகுந்து விட்டது. அதில் சந்தேகமே இல்லை. 45 பந்துகளுக்கு பிறகு சந்திரமுகியா மாறுன கங்காவை தான் கோலியிடம் பார்க்க முடிந்தது. நான் ஒரு பந்தில் 2 ரன் தேவை என இருந்த போது பேட்டிங் சென்றேன். அப்போது சந்திரமுகி படத்தில் ஜோதிகா "ஓதலவா" என சொல்வது போல இங்கே அடி, அங்கே அடி என கோலி என்னிடம் கூறினார்.
அதை எல்லாம் நீங்கள் செய்யுங்கள், என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் என்று தான் மனதில் பட்டது" என்றார். பின்னர் வைடு பால் பற்றி பேசிய அஸ்வின், "நான் சந்தித்த முதல் பந்தை வைடாக வீசியதும் நமக்கும் அந்த பந்துக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல நின்று கொண்டேன். அந்த ஒரு ரன் கிடைத்ததும் மனதில் அப்படி ஒரு குதூகலம். இனிமேல் நமது வீட்டில் கல் எல்லாம் அடிக்கமாட்டார்கள். அடுத்த பந்தை சரியாக அடித்து விட்டால் போதும் என்று இருந்தது.
ஹாரிஸ் ராஃப் ஓவரில் கோலியை சிக்ஸர்கள் அடிக்க வைத்த கடவுள், நாம் அடிக்கும் பந்தை ஃபீல்டர் மீது விட மாட்டாரா என்று நினைத்து அடித்தது தான் அது" என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
