சோகத்தில் இருந்த ரோஹித்.. தட்டிக் கொடுத்த டிராவிட்.. அதன் பிறகு நடந்த சம்பவம்.. மனம் உடைந்த ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தது இந்திய அணி.

சூப்பர் 12 சுற்றில் ஐந்து போட்டிகள் ஆடி இருந்த இந்திய அணி, நான்கில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலிலும் முதலிடம் பிடித்திருந்தது.
மேலும் இந்த முறை நிச்சயம் டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
கடந்த முறை லீக் சுற்றுடன் வெளியேறி இருந்த இந்திய அணி, இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்ததால் ரசிகர்கள் ஆவலும் அதிகமாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. ஆரம்பத்தில் நிதானமாக ரன் சேர்த்திருந்தாலும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டியதால் இந்த ரன்களை எடுக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர். ஜோஸ் பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களும் எடுத்து அசத்தி இருந்தனர்.
8 வது டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 13 ஆம் தேதி மோத உள்ளது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி இருந்த அரையிறுதி போட்டி, முழுக்க முழுக்க இங்கிலாந்து அணி தான் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. கொஞ்சம் கூட போட்டியை கடினமாக்காமல், விக்கெட்டுகள் கூட இந்திய அணி எடுக்காததால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக டக் அவுட்டில் இருந்த ரோஹித் ஷர்மா கண் கலங்கியது தொடர்பான வீடியோக்கள், ரசிகர்கள் பலரையும் மனம் கலங்க வைத்துள்ளது.
ரோஹித் சோகத்தில் அமர்ந்திருக்க அவர் அருகே இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தோளில் தட்டி தேற்றவும் செய்திருந்தார். ஆனாலும் தலை குனிந்தபடி இருந்த ரோஹித், கலங்கி போனார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
— Guess Karo (@KuchNahiUkhada) November 10, 2022

மற்ற செய்திகள்
