இந்தியாவில் 5ஜி சேவை.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. "மக்கள் பயன்பாட்டுக்கு எப்போ??"
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, 5 ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
வரலாற்றில் முதல் முறையாக 1 ஜி அறிமுகமான சமயத்தில், வயர் இணைப்பில்லாத போனில் பேசும் வசதி அறிமுகமானது. இதன் பின்னர், 2 ஜி வந்த சமயத்தில், SMS, MMS உள்ளிட்ட வசதிகளுடன் வயர் இணைப்பு இல்லாத இன்டர்நெட்டும், இதன் பின்னர் 3 ஜி சமயத்தில் வேகமான இன்டர்நெட் வசதியும், தொடர்ந்து 4 ஜி வந்த போது லைவ் ஸ்ட்ரீமிங் என அதிவேக இன்டர்நெட் சேவை அப்டேட் ஆகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றைகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்ட நிலையில், 4 ஜியை விட 5 ஜி இணைய சேவை, பல மடங்கு வேகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று தொடங்கி அடுத்த நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில், 5 ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, 5ஜி தொழிலுட்பம், தொலைத் தொடர்பு துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்றும் தெரிவித்திருந்தார். இன்று 5ஜி தேவை தொடங்கப்பட்டாலும், தீபாவளி பிறகு தான் ஒவ்வொரு கட்டமாக மாநகரங்களில் மக்கள் பெற முடியும் என்றும் தகவ்லல்கள் தெரிவிக்கின்றது.
இதன் முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், புனே, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ உள்ளிட்ட பல நகரங்களிலும் 5ஜி சேவை தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
அதே போல, இந்தியா முழுவதும் அதி விரைவில், 5 ஜி சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.