பின்னாடி நின்னு கத்திய ரசிகர்கள்.. சைலண்டா திரும்பி பாத்து கோலி கொடுத்த 'வார்னிங்'.. VIRAL வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
![virat kohli in practice session fans start to yelling back virat kohli in practice session fans start to yelling back](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/virat-kohli-in-practice-session-fans-start-to-yelling-back.jpg)
இன்றுடன் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், நாளை முதல் (21.10.2022) சூப்பர் 12 சுற்றும் ஆரம்பமாக உள்ளது.
குரூப் A வில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் B யில் இருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடர்ந்து, நாளை ஆரம்பமாக உள்ள சூப்பர் 12 சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் மோதுகின்றன.
இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. மேலும், தங்களின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது.
இதனால், இந்த முறை கடந்த உலக கோப்பைத் தொடரின் தோல்விக்கு இந்திய அணி பழி வாங்குமா என்ற ஆவலிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், டி 20 உலக கோப்பைத் தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி குறித்த வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலி பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அங்கே ரசிகர்கள் வர அனுமதி இருப்பதால், கோலி பேட்டிங் செய்யும் போது, அங்கு வந்த ரசிகர் ஒருவர், மைதானத்திற்கு வெளியே அடிக்குமாறு குறிப்பிடுகிறார். இதனை கவனித்த கோலி, ரசிகர்களிடம், "பயிற்சி நேரத்தில் பேசாதீர்கள். இடையூறாக உள்ளது" என எச்சரிக்கவும் செய்தார்.
இதனைக் கேட்டதும், நீங்கள் ஃப்ரீ ஆகும் போது பேசுங்கள் என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
During the practice Virat Kohli calmly said something like this to the fans .@imVkohli 👑 pic.twitter.com/3X5LnNTQsV
— Hemant Singh (@Hemant18327) October 20, 2022
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)