‘இதுல இருந்தே தெரியுது விவரம் இல்லைனு’ ‘ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்’.. பாகிஸ்தான் வீரருக்கு வித்தியாசமாக பதிலளித்த கம்பீர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 29, 2019 12:48 PM

காஷ்மீர் தொடர்பாக குரல் கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடியின் கருத்துக்கு கம்பீர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Gautam Gambhir lashes out at Shahid Afridi over Kashmir tweet

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. வாரம் ஒருமுறை பாகிஸ்தான் காஷ்மீருக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது என்பதை தெரிவிக்கும் வகையில் செயல்படுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமர் இம்ரான்கான் சொன்னதை நினைவில் வைத்து செயல்படுவோம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 மணியளவில் குறிப்பிட்ட பகுதியில் நான் இருப்பேன். வர நினைப்பவர்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம்’ என பதிவிட்டிருந்தார். இந்நிலையலில் இதற்கு பதிலளிக்கு வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த பதிவில் இருந்து அப்ரிடிக்கு விவரம் இல்லை என தெளிவாக தெரிகிறது. அதனால் ஆன்லைனில் குழந்தைகளுக்கான பாடத்தை வாங்கி தருகிறேன். உதவியாக இருக்கும்’ என அப்ரிடியின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Tags : #CRICKET #GAUTAMGAMBHIR #SHAHIDAFRIDI #KASHMIR