விராட் கோலி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீர் விலை எவ்ளோ தெரியுமா?.. எங்கிருந்து வருதுனு கேட்டா அசந்து போயிருவீங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jun 06, 2019 05:21 PM
விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் மற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாணரமாக திகழ்பவர். விராட் கோலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இறுதிவரை என்ர்ஜி குறையாமல் விளையாடுபவர். அதற்கு காரணம் கோலி கடைபிடிக்கும் முறையான டயட் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிதான் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோலி குடிக்கும் 1 லிட்டர் தண்ணீரின் விலை ரூ.600 என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏவியன் என்னும் நிறுவனத்திடம் இருந்து இந்த தண்ணீர் பாட்டில்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சாதரணமாக தண்ணீரை ஃபில்டர் செய்யும் போது அதிலுள்ள மினரல் சத்துக்கள் குறைந்துவிடுகின்றன. ஆனால் ஏவியன் நிறுவனம் இயற்கையான முறையில் மலைகளில் இருந்து ஃபில்டர் செய்து தண்ணீரை சேகரிக்கின்றன. இதனால் இந்த தண்ணீரில் மினரல் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த தண்ணீரை விராட் கோலி தேர்ந்தெடுக்க இதுதான் காரணமாக இருக்கமுடியும். கோலி எங்கு சென்றாலும் இந்த தண்ணீர் பாட்டில்கள் உடன் எடுத்துசெல்வதாக கூறப்படுகிறது.