"இந்த தடவ நம்பர் 1 'தோனி' இல்ல... அவருக்கு பதிலா யாருன்னு பாருங்க..." 'ட்விட்டர்' வெளியிட்ட புது 'லிஸ்ட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரின் போது ட்விட்டரில் அதிகம் தேடப்பட்ட அணி என்ன, வீரர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பொதுவாக ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெறும் போது, ரசிகர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வீரரின் பெயர் மற்றும் அணியின் பெயர் என்ன என்பது குறித்த தகவலை ட்விட்டர்
வெளியிட்டுள்ளது.
இதில் இந்த முறை அதிகம் பேசப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. இரண்டாம் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மூன்றாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது. வழக்கமாக, தோனி தான் அதிகம் பேசப்பட்ட வீரராக இருப்பார். ஆனால், இந்த முறை அவரது இடத்தை பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பிடித்துள்ளார். இந்தமுறை கோலியின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் கேப்டன்சி கடுமையாக ரசிகர்களால் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது.
அதே போல, ரசிகர்களை ஈர்த்த தருணமாக பஞ்சாப் அணியின் நிகோலாஸ் பூரன் செய்த ஃபீல்டிங், நீண்ட இடைவெளிக்கு பின் கெயில் ஐபிஎல் போட்டிகளில் ஆடியது, சிராஜ் வீசிய 2 மெய்டன் ஓவர்கள், கேஎல் ராகுல் 132 ரன்கள் எடுத்தது ஆகியவை தான்.
மேலும், கோல்டன் டிவீட்டாக சச்சின் டெண்டுல்கர், இதுவரை நான் கிரிக்கெட் வாழ்நாளில் பார்க்காத ஃபீல்டிங் என பூரன் ஃபீல்டிங்கை குறித்து செய்த ட்வீட் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், முதல் 10 ஹேஸ்டேக்குகளில் சென்னை அணி குறித்த #Whistlepodu, #CSK, #yellove ஆகியவை இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
