கேள்வி கேட்ட 'கோலி'... சீறிய 'பாண்டிங்',,.. "2 பேருக்குள்ள இது தான் நடந்துச்சு..." முதல் முறையாக வெளியான 'உண்மை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது.
முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டி ஒன்றின் இடையே டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் விராட் கோலி ஆகியோர் மோதிக் கொண்டது போல தெரிந்தது. அது தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளி வராமல் இருந்து வந்த நிலையில் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இது தொடர்பாக தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
'எனக்கு முதுகில் காயம் காரணமாக அதிக வலி இருந்தது. ஸ்கேன் எடுத்து பார்த்த போது முதுகு நரம்பில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், நான் ஓவர் வீசி முடித்த பின்னர் வெளியேறினேன். நான் வெளியேறியதைக் கண்டு பெங்களூர் அணியில் சலசலப்பு ஏற்பட்டது. கோலி இது தொடர்பாக, போட்டி நடுவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஃபீல்டர் அடிக்கடி களத்தை விட்டு ஏன் வெளியேறுகிறார் என கோலி கோபமடைந்த நிலையில், வெளியே இருந்த பாண்டிங் உடனடியாக எகிறினார். அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். வந்த சண்டையை அவர் விடமாட்டார். நாங்கள் அப்படிப்பட்ட அணியில்லை என பாண்டிங் கோபமாக பதிலளித்தார்' என அஸ்வின் கூறினார்.
இதனால் மைதானத்தில் சிறிய நேரம் பரபரப்பு கிளம்பிய நிலையில், பெரிய அளவில் தகராறு உண்டாகாமல் நடுவர்கள் கோலி மற்றும் பாண்டிங் ஆகியோரை சமாதானம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.