"அவங்க செஞ்ச 'தப்பு'க்கு... 'கோலி'ய ஏன் குத்தம் சொல்றீங்க??..." 'மஞ்ச்ரேக்கர்' சொன்ன 'பரபரப்பு' பதிலால்... ஆடிப்போன 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய பெங்களூர் அணி, எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வியால் தொடரில் இருந்து வெளியேறியது.
தொடக்கத்தில் மிக சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி, கடைசி 4 லீக் போட்டிகளிலும் தோல்வி பெற்றிருந்த நிலையில், ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வியால் வெளியேறியது.
மிகவும் சிறந்த அணியான பெங்களூர் அணி, இதுவரை ஒரு முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை. இந்த முறை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த முறையும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, தனது கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. இதனிடையே பெங்களூர் அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
'பெங்களூர் அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் கோலியை மட்டும் குறை கூற முடியாது. அவரை கேப்டனாக நியமித்த அணி நிர்வாகம் தான் இதற்கு காரணம். அணி நிர்வாகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 8 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடித்து வருகிறார். இரண்டு வருடத்திற்கு முன்பே அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என நான் கூறி விட்டேன். கோலி தானாக வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யமாட்டார். அணி நிர்வாகம் தான் இதில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
ஆனால், அதனை அணி நிர்வாகம் எடுக்கத் தயங்குகிறது. நிலைமை இப்படி இருக்கையில் கோலியை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இதுவே பெங்களூர் அணிக்கு கடைசி பாடமாக இருக்கட்டும். இதனைக் கண்டாவது பெங்களூர் அணி நிர்வாகம் சிறந்த முடிவுகளை உறுதியாக எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.