"அவர அடுத்த 'தோனி'ன்னு சொல்றத தயவு செஞ்சு நிப்பாட்டுங்க...'சிக்ஸ்' அடிச்சா 'தோனி' ஆகிட முடியாது..." இளம் வீரரை விளாசித் தள்ளிய 'கம்பீர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்திருந்த நிலையில் அவருக்கு அடுத்தபடியாக, தோனியின் இடத்தை இந்திய அணியில் நிரப்பப் போவது யார் என்ற கேள்வி எழுந்தது.
இதில் பலர், இளம் வீரரான ரிஷப் பண்ட், தோனி இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், 'முதலில் ரிஷப் பண்ட்டை அடுத்த தோனி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். ஊடகங்களும் அப்படி கூறுவதை நிறுத்த வேண்டும். ஊடகங்கள் அதனை திரும்ப திரும்ப கூறும் போது, அவரும் தன்னை அப்படி நினைத்துக் கொள்ளக் கூடும்.
அவர் ஒரு நாளும் தோனியாக முடியாது. தோனியை போல அவர் சிக்ஸர் அடிக்கிறார் என்பதற்காக அவரை தோனியுடன் ஒப்பிட முடியாது. பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலும் பண்ட் தன்னை நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது' என தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில், இக்கட்டான சூழ்நிலையின் போது 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.