"AWESOME மேடம், முன்னாடி 'சீட்'ல ஒண்ணு, பின்னாடி 'சீட்'ல ஒண்ணு..." 'கார்' விபத்து குறித்து பதிவு செய்த நபருக்கு 'குஷ்பு'வின் 'பதிலடி' ட்வீட்!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Nov 18, 2020 09:53 PM

காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகர் குஷ்பு, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில், இன்று காலை தன்னுடைய காரில் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

khushbu reply for a tweet about car accident gone viral

அப்போது, மதுராந்தகம் அருகே வைத்து குஷ்புவின் கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளான நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் குஷ்புவின் கார் பலத்த சேதமடைந்தது. அவரது காரின் கண்ணாடி மற்றும் கதவு உடைந்து போயிருந்தது.

இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், கண்டெய்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு, தன் மீது குறி வைத்தே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், சரியான பாதையில் வந்த காரின் மீது எங்கிருந்தோ வந்த லாரி வேண்டுமென்றே மோதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து, ட்விட்டரில் பலர் அவருக்கு ஆதரவாகவும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, ஒருவர் ட்விட்டரில் குஷ்புவின் கார் விபத்தில் சிக்கிய புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, இந்த விபத்து செட் செய்து எடுக்கப்பட்ட விபத்து தான் என்றும், அற்புதமாக இந்த விபத்தை படம் பிடித்துள்ளீர்கள் எனவும் கூறி குறிப்பிட்டிருந்தார். 

 

இதனை பகிர்ந்த குஷ்பு, 'ஒரு முட்டாள் எப்போதும் முட்டாளாகவே இருக்கிறான். அந்த இரண்டு புகைப்படங்களில் ஒரே ஆடையின் நிறம் தான் உங்களுக்கு தெரிகிறதா?. அல்லது நீங்கள் பார்வைத் திறன் இழந்தவரா?. அடுத்த தடவை பேசுவதற்கு முன் உங்களது பயன்படாத மூளையை சற்று பயன்படுத்தி பேசுங்கள்' என சற்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Khushbu reply for a tweet about car accident gone viral | Tamil Nadu News.