VIDEO : "அட, நம்ம 'தல'யா இது??..." மொத்தமா மாறி வேற ஆளா நின்ன 'தோனி'!!!... வைரல் 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.

சென்னை அணியின் கேப்டன் தோனி பார்முக்கு வராமல் போனது, சில சீனியர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தாதது என சென்னை அணியின் சொதப்பல்கள் மோசமான விமர்சனத்துக்குள் ஆகின.
அடுத்த ஆண்டு நாங்கள் வலிமையாக திரும்பி வருவோம் என கேப்டன் தோனி தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களும் அதை எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதனிடையே, சென்னை அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை அணி வீரர் கரண் ஷர்மாவின் பிறந்தநாளின் போது, சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தான் அது. கரண் சர்மாவின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில், அடுத்ததாக பிறந்த நாள் கொண்டாடவுள்ள அணி வீரர் மோனு சிங்கின் முகத்தில் தோனி மற்றும் டு பிளஸ்ஸி ஆகியோர் கேக் கொண்டு நிரப்பி மிகவும் ஜாலியாக கொண்டாடினர்.
சிஎஸ்கே அணியின் ஏமாற்றத்தால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு, இந்த வீடியோவில் முற்றிலும் வித்தியாசமாக இருந்த தோனியை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
At Karn's birthday bash, guess who had a pre-birthday smash... 😋💛#SuperBirthdayMonu @msdhoni #WhistlePodu pic.twitter.com/ZXBZev5wik
— Chennai Super Kings (@ChennaiIPL) November 5, 2020

மற்ற செய்திகள்
