"இந்த தடவ 'மிஸ்' ஆகாது... அந்த ஐபிஎல் 'TROPHY'எ எடுத்து வை..." அடித்து சொல்லும் 'வீரர்'... சொன்ன மாதிரியே செஞ்சுடுவாரா??...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் சீசனில் அனைத்து முறையும் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதில்லை.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், தங்களது எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் அணியை நவம்பர் 6 ஆம் தேதி எதிர்கொள்கிறது. லீக் சுற்றின் கடைசி 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக பெங்களூர் அணி தோல்வி பெற்ற போதும், கொல்கத்தா அணியை விட ரன் ரேட் அதிகமாக இருந்ததால் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை கைப்பற்றி அசத்துமா என பெங்களூர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வரும் நிலையில், அந்த அணியின் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், இந்த முறை நாங்கள் தான் கோப்பையை கைப்பற்றுவோம் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வி பெற்று மீண்டும் எங்கள் அணி வெற்றி பாதைக்கு திரும்பும். அடுத்து வரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கும் என்றார்.
'உலகம் முழுவதும் முடங்கிக் கிடக்கும் இது போன்ற ஒரு சூழ்நிலையில், எங்கள் அணியின் ரசிகர்களை குதூகலப்படுத்தவுள்ளோம். ஐபிஎல் போன்ற ஒரு தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை சொல்ல முடியாது. இதில் வெற்றி, தோல்வியின் வித்தியாசம் சிறிதளவே இருக்கும். இதற்காக அணியின் திட்டத்தில் பெரிய மாற்றங்களை செய்யாமல், சிறிய அளவிலான மாற்றங்களுடன் செயல்படுத்த வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.