"இதுனால தான் அவரை 'டீம்'ல எடுக்கல..." எல்லை மீறிய 'அந்த' சம்பவம்... பத்தி எரியும் 'ரோஹித்' விவகாரம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் முடிவடைந்த கையோடு அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அணியின் தேர்வு மிகப்பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியது. காயம் காரணமாக ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்திருந்தது.
அவரது காயத்தில் இருந்து குணமடைய 3 வாரங்கள் ஆகும் என்றும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், அவர் ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பிசிசிஐ க்கு எதிராக கேள்விகளை உருவாக்கியது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான் ரோஹித் புறக்கணிப்புக்கு காரணம் எனக் கூறி ரோஹித்தின் ரசிகர்கள் கோலியை விமர்சனம் செய்தனர். இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரோஹித் ஷர்மா களமிறங்கினார். தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதை மறைமுகமாக அவர் அணியின் தேர்வு குழுவுக்கு தெரிவிப்பது போல நேற்று ஆடியது அமைந்த நிலையில், அவரது காயம் குணமடைய 3 வாரங்களுக்கு மேல் ஆகும் என தெரிவித்திருந்த நிலையில், எப்படி ஐபிஎல் போட்டியில் அவர் களமிறங்க முடியும்? என்றெல்லாம் பிசிசிஐ மற்றும் கோலியை எதிர்த்து கேள்விகள் பலமாகின. பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு மீது மீம்ஸ்கள் பறந்தன.
இதனிடையே, நேற்று களமிறங்கிய ரோஹித் ஷர்மா வெறும் 4 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆனார். அது மட்டுமில்லாமல், இந்த சீசனில் ரோஹித் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அதனை குறிப்பிட்டு ரசிகர்கள் ரோஹித்தை விமர்சனம் செய்தனர். மேலும் சிலர், நன்றி ரோஹித் ஷர்மா என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி, மோசமான பார்மில் ரோஹித் இருப்பதால் தான் அவரை அணியில் இருந்து தூக்கி விட்டதாகவும், அவர் விரைவில் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ரோஹித்துக்கு ஆதராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் ரோஹித் - கோலி விவகாரம் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில், நேற்றைய போட்டியில் ரோஹித் ஷர்மா களமிறங்கியது இன்னும் பிரச்சனையை வலுப்படுத்தியுள்ளது. ரோஹித் அணியில் இடம்பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்பது சரிவர தெரியாத நிலையில், சிறந்த வீரர்கள் அதிகம் விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
