‘ரொம்ப கஷ்டமான கேள்வி’!.. இந்த 3 பேர்ல யார் ஸ்பின்னுக்கு எதிரான ‘பெஸ்ட்’ விக்கெட் கீப்பர்..? அஸ்வின் யாரை சொன்னார் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்பவர்கள் குறித்து அஸ்வின் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் கிரிக்கெட்டில் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார். ஒரு சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால், விக்கெட் கீப்பரது ஒத்துழைப்பும் தேவை.
ஸ்டம்புக்கு பின்னால் திறமையான விக்கெட் கீப்பர் இருப்பதைப் பொறுத்தே சுழற்பந்து வீச்சாளர் விக்கெட் எடுப்பதும், ரன்களை விட்டுக் கொடுப்பது அமையும். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தினேஷ் கார்த்திக், சாஹா மற்றும் ரிஷப் பந்த் ஆகிய விக்கெட் கீப்பர்களுடன் அஸ்வின் விளையாடியுள்ளார்.
இதில் யார் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்பவர்கள் என அஸ்வினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அஸ்வின், ‘ தோனி, சாஹா, தினேஷ் கார்த்திக் என்ற வரிசையில் அவர்களை தனித்துவப்படுத்தி சொல்வது மிகவும் கடினம். தினேஷ் கார்த்திக் உடன் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். ஆனாலும் கடினமான விக்கெட்டுகளை மிகவும் எளிதாக எடுப்பவர் தோனிதான்.
அதற்கு உதாரணமாக கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் எட்வார்ட் கோவனை தோனி சிறப்பாக ஸ்டம்பிங் செய்திருப்பார். போட்டியின் முதல் நாளன்று பந்து பெரிதாக திரும்பவில்லை. ஆனால் பந்து நன்றாக பவுன்ஸாகி வந்தது. அதை சரியாக பிடித்து தோனி ஸ்டம்பிங் செய்திருந்தார். ரன் அவுட், கேட்ச், ஸ்டம்பிங் என எதையும் அவர் தவற மாட்டார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்பவர் அவர்தான். சாஹாவும் அபாரமான விக்கெட் கீப்பர் தான்’ என அஸ்வின் கூறியுள்ளார்.