‘இது என்ன டைப் டான்ஸ்-ன்னு தெரியலயே… ரோகித் என்ன பண்றீங்க..?’- ஷ்ரேயாஸ் வெற்றியை எப்படிக் கொண்டாடுறாங்க பாருங்க..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தி உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள், பிரபலங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வகையில் இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா சற்று வித்தியாசமாக ஷ்ரேயாஸின் சதத்தைக் கொண்டாடி உள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், ஷ்ரத்துல் தாக்கூர் உடன் ரோகித் சர்மாவின் உற்சாக நடனம் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகியுள்ள ஷ்ரேயாஸ் 2-ம் நாள் ஆட்டமான இன்று சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகம் ஆன முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசிய 16-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். மேலும், மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுள் இந்தச் சாதனையைப் படைத்த 3-வது வீரர் என்ற பெருமையையும் ஷ்ரேயாஸ் பெறுகிறார்.
இதற்கு முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ரோகித் சர்மா மற்றும் கடந்த 2018-ம் ஆண்டு ப்ரித்வி ஷா ஆகியோரும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த சூழலில் ஷ்ரேயாஸ், ஷ்ரத்துல் மற்றும் ரோகித் ஆகிய மூவரும் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோவை ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த மூவர் கூட்டணி இந்திய அணியில் மட்டுமல்ல பல ஆண்டுகளாக மும்பை மாநில அணிக்காக விளையாடி நண்பர்கள் ஆனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
