‘ஏம்பா எங்க பிசியோவ வேணும்னா அனுப்பி வைக்கட்டுமா’.. அஸ்வின் நகைச்சுவையாக சொன்ன கருத்துக்கு ரஷித் கொடுத்த ‘வேறலெவல்’ பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நகைச்சுவையாக கூறிய கருத்துக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் 12 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. அதில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நம்பீயா ஆகிய அணிகள் குரூப் 2-ல் விளையாடுகின்றன.
இதில் பாகிஸ்தான் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 2-ம் மற்றும் 3-ம் இடத்தில் உள்ள நியூஸிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் நியூஸிலாந்து விளையாடிய 4 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
ஆனால் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகதான் உள்ளது. ஒருவேளை நாளை (07.11.2021) நடைபெற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதி செல்ல வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் காயமடைந்துள்ளதால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுகுறித்து நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. ஆப்கானிஸ்தான் இதுவரை நன்றாக விளையாடியுள்ளது. முஜீப்புக்கு ஏதாவது பிசியோ தேவைப்பட்டால் நாங்கள் அனுப்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
@ashwinravi99 Bhai Don’t worry our team Physio Prasanth Panchada “Chusukuntunnaru” 😂😂🤪
— Rashid Khan (@rashidkhan_19) November 4, 2021
இதற்கு பதிலளித்த ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ‘அஸ்வின் பாய் கவலைப்படாதீர்கள், எங்களுடைய அணியின் பிசியோ பிரசாந்த் பஞ்சடா பார்த்துக்கொள்வார்’ என ஸ்மைலி எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். பிரசாந்த் பஞ்சடா இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
