VIDEO: பர்த்டேவை இப்படியா கொண்டாடுறது..! இளம்பெண்ணின் செயலுக்கு வலுத்த கண்டனம்.. போலீசார் அதிரடி ஆக்ஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது இளம்பெண் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Woman fires shots to celebrate birthday, Police take notice Woman fires shots to celebrate birthday, Police take notice](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/woman-fires-shots-to-celebrate-birthday-police-take-notice.jpg)
சமீபத்தில் பெண் ஒருவர் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிய ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கிதான். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவின் நடுவில் அப்பெண் துப்பாக்கியுடன் நிற்கிறார். அப்போது அருகில் இருந்த நபர் துப்பாக்கியை சுட சொன்னதும், அப்பெண் துப்பாக்கியை மேல் நோக்கி சுடுகிறார்.
அப்போது மக்கள் சிலரும் அந்த வழியாக நடந்து சென்றுள்ளனர். மேலும் குடியிருப்பு மத்தியில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது போல் உள்ளது. அதனால் நெட்டிசன்கள் பலரும் அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
सम्बन्धित प्रकरण में थाना कोतवाली नगर पर सुसंगत धाराओँ में अभियोग दर्ज है, अग्रिम विधिक कार्यवाही प्रचलित है।
— MUZAFFARNAGAR POLICE (@muzafarnagarpol) December 23, 2021
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)