VIDEO: ‘ஜீனியஸ்ங்க அவரு’!.. ரிக்கி பாண்டிங் சொன்ன மாதிரியே நடந்திருச்சு.. வியந்துபோய் அஸ்வின் போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிக்கி பாண்டிங் கூறியது போலவே விக்கெட் விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹப்பா மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தங்களது முதல் இன்னிங்ஸில் 473 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்தது. அதனால் 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, அந்த அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், தனது காலை இடதுபுறமாக நகர்த்தி விளையாடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கேமரூன் கிரீனின் கால் நகர்வு சரியாக இல்லை, பவுலர் மட்டும் சரியாக ஸ்டம்பை நோக்கி பந்து வீசினால் நிச்சயம் அவர் அவுட் ஆவார் என்று கூறினார். அவர் கூறியது போலவே பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி கேமரூன் கிரீன் வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Cricket literacy rate ✈️✈️ https://t.co/YiaiQa9hvE
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 18, 2021
இந்த வீடியோவைப் பார்த்து வியந்துபோன இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ‘கிரிக்கெட்டை இவரை விட யாராலும் இவ்வளவு புரிந்து வைத்திருக்க முடியாது’ என்று ட்வீட் செய்துள்ளார். ரிக்கி பாண்டிங் இதுபோல் வர்ணனை செய்யும் போது பல போட்டியின் செயல்பாடுகளை முன்பே கணித்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
