VIDEO : "அப்படியே' றெக்க' கட்டி பறக்கிற மாதிரி இருந்துச்சு... 'தல' தல தான் யா.." 'தோனி' குறித்து 'சுவாரஸ்ய' தகவல் பகிர்ந்த 'வருண்' சக்ரவர்த்தி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி சென்னையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இந்த போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார். இந்த போட்டியின் மிக முக்கிய திருப்பு முனையாக தோனியின் விக்கெட் அமைந்த நிலையில், வருண் சக்ரவர்த்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அந்த அணி வீரர்களான ராகுல் திரிபாதி மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் போட்டி குறித்து பேசினர். அப்போது தோனியின் விக்கெட்டை எடுத்தது குறித்து வருண் சக்ரவர்த்தி கூறுகையில், 'உண்மையில் தோனிக்கு முதலில் பந்து வீசுவது என்பது சற்று பதட்டமாக இருந்தது. அதன் பின்னர், சரியான லெந்தில் பந்தை வீசியதால் அவரை அவுட் செய்ய முடிந்தது' என்றார்.
மேலும், 'மூன்று வருடங்களுக்கு தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே பலமுறை சென்னை சேப்பாக்கம் மைதானம் சென்றுள்ளேன். அதனால் அவருக்கு பந்து வீசியது என்பது கனவு நினைவான தருணமாகவே உள்ளது. போட்டி முடிந்த பின்னர், தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னர் தமிழில் வருண் சக்ரவர்த்தி 'தல தல தான்'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Dream Comes True ❤️ Congrats #VarunChakravarthy 💛#CSK pic.twitter.com/yQrwUvxw1N
— ARUN✳️VJ | CSK 💛 (@ItzArunvj) October 8, 2020

மற்ற செய்திகள்
