VIDEO : "இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்??"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' !! - வைரலாகும் 'வீடியோ'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசெப்டம்பர் 19 ஆம் தேதியன்று ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
![ziva answer with her father dhoni pencil work in hand gone viral ziva answer with her father dhoni pencil work in hand gone viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ziva-answer-with-her-father-dhoni-pencil-work-in-hand-gone-viral.jpg)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் அவரது அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே போல, தோனியும் மிகவும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், தோனியின் மகள் ஷிவா தந்தையை அதிகமாக மிஸ் செய்து வருகிறார். தற்போது ஷிவாவின் இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஷிவாவின் கையில் தந்தை தோனியின் பென்சில் ஸ்கெட்ச் புகைப்படம் ஒன்று உள்ளது. அப்போது தோனியின் மனைவி சாக்ஷி, இது யார் என ஷிவாவிடம் கேட்க, அதற்கு ஷிவா, 'இது எனது தந்தை' என்கிறார்.
தொடர்ந்து, சாக்ஷி, 'நீ உறுதியாக சொல்றியா' என கேட்க, அதற்கு பதிலளித்த ஷிவா, 'மகேந்திர சிங் தோனி. நான் உறுதியாக சொல்றேன்' என மிகவும் க்யூட்டாக பதில் சொன்னார். முன்னதாக, ஊரடங்கு சமயங்களில் தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து ரகளை செய்த வீடியோக்கள் அதிகம் வைராலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)