"இன்னைக்கி ஆச்சும் சம்பவம் பண்ணுங்க பா"... ஏக்கத்தில் ரசிகர்கள்... டாஸ் வென்றது யார்??... முழு விவரம் உள்ளே:
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முன்னதாக, இரு அணிகளுமே இதுவரை நான்கு போட்டிகளில் ஆடியுள்ள நிலையில், ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் மிக பலம் வாய்ந்த அணியான பஞ்சாப், இரண்டு போட்டிகளில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டது. அதனால், இந்த போட்டியில் இன்னும் கவனமாக அந்த அணி ஆட முயற்சிக்கும். மற்றொரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் தொடர்களிலேயே சிறந்த அணியாக இருந்த போதும் இந்த முறை சற்று மோசமான பார்மில் உள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
பேட்டிங் வரிசை சென்னை அணிக்கு இதுவரை சிறந்ததாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரரான வாட்சன், இன்னும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாதது அணிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகும். அதே போல, தோனியின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள் ஆகியுள்ளது.
ராயுடு, பிராவோ ஆகியோர் கடந்த போட்டியில் திரும்ப அணிக்கு வந்தாலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தங்களைச் சுற்றியுள்ள குறைகளை எல்லாம் சரி செய்து இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி ஆடினால் நிச்சயம் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடும் லெவன் :
கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், மந்தீப் சிங், நிகோலஸ் பூரான், கிளென் மேக்ஸ்வெல், சர்பராஸ் கான், க்றிஸ் ஜோர்டன், ஹர்ப்ரீத் பிரார், ரவி பிஷ்னோய், செல்டன் கோட்ரல், முகமது ஷமி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடும் லெவன் :
பாப் டூ பிளெஸிஸ், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பியூஷ் சாவ்லா