"இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு??.." 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு13 ஆவது ஐ.பி.எல் சீசன் வருகிற 19 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் வர்ணனையாளராக பிரெட் லீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மும்பை வந்துள்ளார். அவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்ஸ்டாக்ராமில் ரசிகர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். இதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்த நிலையில், இந்தாண்டு எந்த அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, 'அதை சொல்வது மிகவும் கடினம் தான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிகம் வாய்ப்புள்ளது' என பிரெட் லீ பதிலளித்தார்.
தொடர்ந்து, வேறொருவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பற்றி கேட்ட கேள்விக்கு, 'நிச்சயம் கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்' என பதிலளித்துள்ளார். அதே போல, ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் இருந்து மிகப் பெரிய ஆட்டத்தை தான் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் இன்னும் 8 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணியின் ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
