VIDEO : "ஏன்யா, எல்லாரும் அவர மாதிரி ஆயிட முடியுமா??"... பயிற்சியில் 'ஹெலிகாப்டர்' ஷாட் அடித்த 'வீரர்',,.. வைரலாகும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இதனிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), வலைப்பயிற்சியின் போது பந்து வீச்சாளர் வீசும் பந்து ஒன்றை ஹெலிகாப்டர் ஷாட் (Helicopter Shot) மூலம் அடித்து ஆடுகிறார்.
ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே அனைவரின் நினைவுக்கு வரும் வீரர் எம்.எஸ்.தோனி தான். அவரைப் போலவே ஸ்மித்தும் பந்தை ஆடிய நிலையில், அந்த வீடியோவின் கீழ் பலர், எப்படி நீங்கள் ஆடினாலும் தோனியை சமன் செய்ய முடியாது என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், ஸ்மித் ஹெலிகாப்டர் ஷாட்டை மிகச் சிறப்பாக ஆடியதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தோனி ஆகியோர் ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (Rising Pune Supergiant) அணிக்காக இணைந்து ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Gotta love a captain who plays the helicopter shot! 😉#HallaBol | #RoyalsFamily | @stevesmith49 pic.twitter.com/tPKYZuR745
— Rajasthan Royals (@rajasthanroyals) September 24, 2020

மற்ற செய்திகள்
