"நீங்க யாரு எங்க 'தல'ய விமர்சனம் பண்றதுக்கு??.." - முன்னாள் வீரரை 'ரவுண்டு' கட்டிய 'தோனி' ரசிகர்கள்!!.. நடந்தது 'என்ன'??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 216 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 4 அல்லது 5 ஆவது ஆர்டரில் இறங்காமல் 7 - வது வீரராக களமிறங்கினார். தோனியின் இந்த செயல்பாட்டிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.
Gautam Gambhir criticizing Indian Cricket Board and MS Dhoni whenever he gets a chance be like pic.twitter.com/p4aFJYIELt
— ꜱᴀɢᴀʀ ||राणा||🖤 (@Sarcastic_Sagar) September 23, 2020
Gautam Gambhir
During Playing Days. After Retirement. pic.twitter.com/3RWwfiVR27
— Sameer Allana (@HitmanCricket) September 23, 2020
'ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழி நடத்துவதை விட்டு இறுதியில் களமிறங்கியது சரியல்ல. சரியான நேரத்தில் களமிறங்கியிருந்தால், டுபிளெஸ்ஸி-யுடன் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்கலாம். அதை விட்டுவிட்டு இறுதி ஓவரில் மூன்று சிக்ஸர்களை தோனி அடித்ததை மட்டும் புகழ்த்தி தோல்வியை நியாப்படுத்தாதீர்கள்' என கம்பீர் தெரிவித்திருந்தார்.
Gautam Gambhir is the Kangana Ranaut of cricket
— Panistha Bhatt (@PanisthaB) September 23, 2020
One bad match for CSK and Dhoni and @GautamGambhir comes out lashing the MSD. As if he was always successful as a captain and player. It's just the beginning of tournament, take a seat, enjoy and boost the morales of youngsters and not always come out to satisfy personal grudges https://t.co/oKEs7hJEmI
— Utkarsh 🇮🇳 (@chilllkaro) September 23, 2020
கம்பீரின் இந்த கருத்திற்கு தோனி ரசிகர்கள் பலர், அவரை எதிர்த்து பல மீம்ஸ்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். 'தன்னுடன் முன்பு ஆடிய வீரரின் அணிக்கு ஆதரவாக வார்த்தைகள் எதுவும் பேசாமல் இப்படி தவறுகளாக சுட்டிக்காட்டுவது சரியா?' என சில தோனி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also gambir🤣🤣🤣@GautamGambhir pic.twitter.com/wn2Llb1v47
— Rajith Pavan (@rajith_rajiii) September 23, 2020
மேலும் சிலர், 'ஒரு ஆட்டத்தில் நிகழ்ந்த தோல்வியை வைத்து எப்படி இப்படி குறை கூறலாம்?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். சில மீம்ஸ்களும் கம்பீருக்கு எதிராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.