'தோனி' - 'ரெய்னா' நடுவுல என்ன தான் பிரச்சனை??.. சுற்றி எழும் பல 'யுகங்கள்'... சீக்ரெட்டா சின்ன 'தல' சொன்ன 'பதில்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தாண்டு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சென்னை அணிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா இந்த தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

தனிப்பட்ட காரணங்களுகாக அவர் விலகியதாக முதலில் தகவல்கள் வெளியான நிலையில், சென்னை அணி நிர்வாகத்துடன் எதோ தகராறு ஏற்பட்டதன் காரணமாக அவர் விலகியதாகவும் பரபரப்பு கிளம்பியது. இதற்கு ரெய்னாவே தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் தான் விலகியதற்கு காரணம் என கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
அது மட்டுமில்லாமல், ரெய்னா மற்றும் தோனி ஆகியோருக்கு இடையே ஏதேனும் தகராறு உள்ளதா என்ற கோணத்திலும் சில தகவல்கள் வெளியானது. முன்னதாக, கிரிக்கெட்டில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் வலம் வந்த நிலையில், தோனி ஓய்வு அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.
இதனிடையே, தோனி மற்றும் ரெய்னா ஆகியோருக்கு இடையே குழப்பங்கள் உள்ளது என பல தகவல்கள் ஒருபுறம் பரவினாலும், இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்கின்றனர் அவர்களின் நெருங்கிய வட்டாரங்கள். இதற்கு சான்றாக, ரெய்னாவின் சமீபத்திய செயல் இருந்துள்ளது. தோனி தொடர்பாக சிஎஸ்கே பதிவிட்ட சில ட்விட்டர் பதிவுகளை லைக் செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் தோனி ஃபேன்ஸ் வெளியிட்ட தோனியின் புகைப்படங்களையும் ரெய்னா லைக் செய்துள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட புகைப்படங்களையும் லைக் செய்துள்ளார் ரெய்னா.
தங்களை சுற்றி பரவி வரும் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில், ரெய்னாவின் இந்த செயல் மறைமுகமாக இருவருக்குள்ளும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை தெரிவிப்பதாக கருதி சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்
