"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு..." - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐ.பி.எல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக, ஐ.பி.எல் போட்டிகளுக்காக துபாய் வந்த சென்னை அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதில், சென்னை அணியின் வேகப் பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மீண்டும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு முறையும் அவருக்கு நெகட்டிவ் என முடிவுகள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ நெறிமுறைகளின் படி, தீபக் சாஹருக்கு கார்டியோ வாஸ்குலர் சோதனை (cardio vascular test) மேற்கொள்ளப்படும். அதன் பிறகு, மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என முடிவுகள் வந்ததும் அவர் அணியில் இணைவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Deeback Chahar! 🦁💛#WhistlePodu #Yellove pic.twitter.com/muWNCiB2KF
— Chennai Super Kings (@ChennaiIPL) September 9, 2020