"அட, என்ன வேணா நடக்கட்டும்... நாங்க பாசிட்டிவா தான் இருப்போம்,,." வைரலாகும் 'ட்வீட்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்றது.

ஹைதராபாத் அணி தங்களது முதல் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி பெற்றிருந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, நேற்று பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே, இந்த ஐபிஎல் தொடரில், சென்னை அணி மோசமான பார்மில் உள்ள நிலையில், தற்போது கடைசி இடம் பிடித்திருப்பது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவாக உள்ளது. சென்னை அணியின் மோசமான ஃபார்ம் தொடர்பாக பல மீம்ஸ்கள் வைரலாகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாட்ஷா திரைப்படத்தில் வரும் ராமய்யா பாடலின் வரிகளை குறிப்பிட்டுள்ளனர். 'எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமைய்யா' என்பதை குறிப்பிட்டுள்ளனர். சென்னை அணி, 8 ஆவது இடத்தில் இருப்பதை அவர்களே மீம் போல உருவாக்கி சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளனர்.
இதற்கு கீழ் ரசிகர்கள், பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். மற்ற அணிகள் தங்கள் வெற்றியை பெற்ற தகவலை பதிவிடும் போது, நீங்கள் மட்டும் உங்களையே கலாய்த்து பதிவிடுகின்றனர் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
— Chennai Super Kings (@ChennaiIPL) September 29, 2020

மற்ற செய்திகள்
