VIDEO : "ஐ லவ் யூ 'தோனி',,... 'சென்னை' 'டீம்'க்கு விசில போடு,,." - குட்டி 'சிஎஸ்கே' ஃபேன் செய்த அட்டகாசமான 'சம்பவம்',,.. வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி பெற்றிருந்தது.

இந்த போட்டியின் போது, கடைசி ஓவர்களில் சென்னை அணி கேப்டன் தோனி 3 சிக்ஸர்களை விளாசியிருந்தார். ஆனாலும், அதற்கு முந்தைய ஓவர்களில் அவர் பந்துகளை அடித்து ஆடாததால் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து, பல ஐபிஎல் ரசிகர்கள் மற்றும் சில கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.
இதற்கு தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு முழு ஆதரவை அளித்தனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், துபாயில் உள்ள சிறுவன் ஒருவன் தனது கையில் சிஎஸ்கே அணியின் தொப்பி ஒன்றை வைத்துக் கொண்டு இதில் தோனி எனக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்தார் என்றும், 'Dhoni I love you...you're a beautiful man!' என்றும் அந்த சிறுவன் மிகவும் ஆனந்தத்துடன் கூறுகிறான்.
இந்த வீடியோ தற்போது சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது.
'Dhoni I love you...you're a beautiful man!' We found this adorably #yellove @msdhoni fan from Dubai and just can't get over it. One of those things that puts a wide smile in your face. 😍🦁💛 #WhistlePodu pic.twitter.com/B2UAct51GU
— Chennai Super Kings (@ChennaiIPL) September 24, 2020

மற்ற செய்திகள்
