VIDEO: கப் அடிச்ச சந்தோஷத்துல ‘செம’ டான்ஸ்.. விஜய் மாதிரி ‘ஸ்டெப்’ போட்டு கலக்கிய தினேஷ்கார்த்திக்.. என்ன பாட்டு தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசையத் முஷ்டக் அலி கோப்பையை வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் ஒன்றிற்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சையத் முஷ்டக் அலி கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியும், பரோடா அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பரோடா அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 120 ரன்களை பரோடா அணி குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு சொலங்கி 49 ரன்களை எடுத்தார்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி விளையாடியது. 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களை எடுத்து தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
VAATHI COMING, OTHTHEY!! BAAIS VERA MAAARI CELEBRATION AFTER THE #SMA2021 WIN! 😂😂🔥🔥 pic.twitter.com/zWemnK2CHU
— Srini Mama (@SriniMaama16) January 31, 2021
இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக வீரர்கள், தங்களது ஓய்வறையில் நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெறும் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
