VIDEO: லைவ்வில் 'கெட்ட' வார்த்தை சொல்லி.... மானத்தை வாங்கிய 'நியூசி' வீரர்... தெறித்து ஓடிய ஹிட்மேன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 26, 2020 10:26 PM

நியூசிலாந்து-இந்தியா மோதிய 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.

IND Vs NZ: Guptill uses hindi cuss word against Chahal

போட்டி முடிந்தபின் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் உடன் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா பேசிக்கொண்டு இருந்தார். இதை நிருபர் ஒருவர் லைவ் செய்து கொண்டிருந்தார். அப்போது சக வீரர்களுடன் அங்கு வந்த யஷ்வேந்திர சாஹல் நிருபரின் கையில் இருந்த மைக்கை வாங்கிக்கொண்டு குப்தில்-ரோஹித் இருக்கும் இடத்திற்கு சென்றார்.

என்ன நடக்கிறது? என சாஹல் கேட்க, பதிலுக்கு குப்தில் 'ஹே ஹாண்டு' என இந்தியில் பேசும் ஆர்வத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை சொல்லி விட்டார். இதைக்கேட்டதும் ரோஹித் அரண்டு போய் ஓடியே போய் விட்டார். எனினும் அதை கண்டுகொள்ளாத சாஹல் தொடர்ந்து குப்திலிடம் பேசி ஒருவழியாக மைக்கை மீண்டும் நிருபரிடம் கொடுத்தார்.

லைவ்வில் ஒளிபரப்பாகி விட்டதால் இந்த வார்த்தையை எடிட் செய்யவும் முடியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரஸ் போல பரவி வருகிறது. 

Tags : #CRICKET #BCCI