'8 மணிக்கு ஷார்ப்பா வர, நான் எம்பயரில் டின்னரும்..மிலோனாவில் ஐஸ்க்ரீமும் சாப்டல..' கான்ஸ்டபிளின் உருக்கமான கடிதம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 17, 2019 12:25 PM
காவலர் பணி என்பது 24 மணி நேரமும் 7 நாட்களும் சின்சியருடம் வேலையையும் குடும்பத்தையும் பேலன்ஸ் பண்ணி செய்ய வேண்டிய சர்வீஸ் பணியாகப் பார்க்கப்படுகிறது.

இரவு பகலாக அவர்களின் பணி சொல்லொன்னாத் துயரம் மிகுந்தது. இந்த நிலையில் பெங்களூரு கான்ஸ்டபிள் ஒருவரை ஏன் தினமும் தாமதமாக வருகிறீர்கள் என்று மேலதிகாரி காட்டமாகக் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பொறுமையிழந்த கான்ஸ்டபிள் ஒருவர் ஏக மனதாக கான்ஸ்டபிள்களின் ஒட்டுமொத்த குரலாக உருக்கமாக பேசியுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பெங்களூரின் ஜெய்நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் கவுடா என்கிற கான்ஸ்டபிள் ஸ்ரீதர் கவுடா, மஞ்சுநாத், அஞ்சனாமூர்த்தி உள்ளிட்ட சில கான்ஸ்டபிள்களும் ஒருவாரத்துக்கும் மேலாக தாமதமாக டியூட்டி வருவதகச் சொல்லி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை பற்றி கான்ஸ்டபிள் ஸ்ரீதர் கவுடா எஸ்.ஐ.க்கு எழுதியுள்ள மறுமொழி கடிதம் இணையத்தில் அவரால் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.
அதில், தனது மேலதிகாரிக்கு பதில் எழுதியுள்ள ஸ்ரீதர் கவுடா,‘நான் ஷிவ் சாகரில் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, கேண்டேனில் லன்ச் சாப்பிட்டுவிட்டு, இரவு உணவை எம்பயர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, மிலோனாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்டுவிட்டு, ஜெய் நகர் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் இருக்கும் அறையில் தூங்கினால், நீங்கள் குறிப்பிட்டதுபோல் காலையில் தாமதமாக வராமல் ஷார்ப்பாக 8 மணிக்கு வரலாம்’ என்று உருக்கமாக எழுதியுள்ளார். மேலும் தொடர்ந்தவர், ‘ஆனால், அதற்கு மாறாக போலீஸ் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் தனது மனைவிக்கு காலை 7 மணி டியூட்டி என்பதால், தன் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு, அப்பா, அம்மாவை கவனித்துவிட்டு, குழந்தைகளை பள்ளியில் டிராப் செய்துவிட்டு 8.30 மணிக்கெல்லாம் வருவது எப்படி சாத்தியம்?’ என்று வினா எழுப்பியுள்ளார். ஆனால் அந்த கடிதத்தின் ஒரு நகலை முன்னதாகவே இணையத்தில் பதிவேற்றிவிட்டு, மேலதிகாரியிடம் அனுப்பியுள்ளார்.
ஆனாலும் டிசிபி, ஏசிபி உத்தரவுகளின்பேரில் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீதர், தன் மீது வேறு சில குற்றச்சாட்டுகளை சுமத்தி, ஆனால் தான் எழுதிய கடிதத்தின் மீதான கோபத்தைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் தன்னை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், இதனை எதிர்த்து தான் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார்.
