'ரோட்டு மேல காரு.. காரு மேல ஐபிஎல் ஸ்கோரு’.. கலக்கும் டாக்ஸி டிரைவரு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Apr 08, 2019 05:59 PM

இந்தியாவின் 12-வது ஐபிஎல் மேட்ச் சீசன் கடந்த வாரம் தொடங்கி, இந்தியா முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Hyderabad Taxi driver puts IPL Scoreboard On the top of his taxi viral

பெங்களூரு அணி மற்றும் சென்னை அணிகளுக்கான போட்டிகளுக்கான பார்வையாளர்களே சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் அதிகமாக இருப்பதால், இந்த அணிகளுக்கிடையிலான தொடக்க போட்டிகள் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்ததோடு இந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுக்களும் கிடுகிடுவென விற்றுத் தீர்ந்தன.

பேஸ்புக், ட்விட்டர் என இணையதளம் தொடங்கி, காபி ஷாப், ரெஸ்டாரண்ட் என பல இடங்களிலும் இருந்த டிவிக்கள் கிரிக்கெட் ஸ்கோர்களை காட்டிக்கொண்டே இருக்கும் சேவைகளையும் செய்யத் தொடங்கின. எந்த வருடங்களிலும் இல்லாத அளவுக்கான உச்சபட்ச கிரிக்கெட் ரசிகர்களாக இந்த வருட போட்டிகளை காணக்கூடிய ரசிகர்கள் இருப்பதால், ஒவ்வொரு போட்டிகளின் சூழலுக்குமான மீம்ஸ்கள் பறக்கின்றன.

இந்த நிலையில், இந்த கிரிக்கெட் சூழலை, தன் வாடிக்கையாளரளை கவருவதற்கும், தன் மீதான கவனம் குவிவதற்குமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த டாக்ஸி டிரைவர் ஒருவர் ஹைதராபாத்தில் தான் இயக்கிவரும் டாக்ஸியின் மேற்புறத்தில் லைவ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு ஒன்றை மாட்டியுள்ளார்.

இந்த லைவ் கிரிக்கெட் ஸ்கோர் போர்டு கிரிக்கெட் மேட்சின் ரிசல்ட்டுகளை, ரன்களை, விக்கெட்டுகளை அவ்வப்போது துல்லியமாக அப்டேட் செய்து காட்டுவதால், பொதுமக்களின் கவனம் இந்த டாக்ஸியின் மீது குவிகிறது. மேலும் இந்த டாக்ஸியின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

Tags : #IPL #IPL2019 #VIRAL #CAR #LIVECRICKETSCORE