3 வயதில் ‘தல’யுடன் போட்டோ.. ‘17 வயதில் தோனிக்கு எதிராக விளையாடி அசத்தல்’.. வைரலாகும் வீரரின் போட்டோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 12, 2019 07:51 PM

தோனியுடன் இருக்கும் ராஜஸ்தான் அணியின் இளம் வீரரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajasthan royals player Riyan took a picture with Dhoni goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி நேற்று(11.04.2019) ராஜஸ்தானில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 151 என்ற இலக்கை சென்னைக்கு நிர்ணயித்தது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 155 ரன்கள் எடுத்து சென்னை அணி  அபார வெற்றி பெற்றது.

மேலும் இப்போட்டியின் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வீரர் வீசிய பந்து நோ பால் என ஒரு நடுவரும், மற்றொரு நடுவர் இல்லை எனவும் தெரிவித்தனர். இதனால் கோபமாக மைதானத்திற்குள் சென்ற தோனி, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்தது.

மேலும் இப்போட்டியில் மற்றுமொரு சுவாரஸ்யமான நிகழ்வும் நடந்துள்ளது. ரியான் என்ற இளம் வீரர் தனது 3 வயதில் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டள்ளார். தற்போது 17 வயதான அவர் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.  நேற்றைய சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பக பந்து வீசி அசத்தினார். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த இவர், தோனியுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL #IPL2019 #MSDHONI #CSKVSRR #VIRAL