'இவரு' இருந்தா... அந்த டி20 மேட்சுல இந்தியா 'தோத்தது' கெடையாதாம்... புள்ளிவிவரத்துடன் 'புட்டுப்புட்டு' வைக்கும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 31, 2020 11:56 PM

இன்றைய டி20 போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் என அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விதிவிலக்காக கே.எல்.ராகுல் மட்டும் டீசண்டான ரன்களை எடுத்து அணிக்கு ஓரளவு உதவி செய்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள்.

IND Vs NZ: Manish Pandey is the lucky charm of Team India

இனி அவ்வளவு தான் மேட்ச் நம் கையை விட்டு போய் விட்டது என்றே நினைத்தனர். ஆனால் தனியொருவனாக போராடிய மணீஷ் பாண்டே 50 ரன்கள் அடித்து அணிக்கு மாபெரும் உதவி செய்தார். அதேபோல நவ்தீப் சைனியும், ஷர்துல் தாகூரும் தங்களது பங்கினை சிறப்பாக செய்தனர். கடைசியில் சூப்பர் ஓவர் வரை சென்றாலும் இந்திய அணி மாபெரும் போராட்டம் நடத்தி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புள்ளிவிவரம் ஒன்றை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். இன்றைய போட்டியையும் சேர்த்து கடைசி 18 டி20 போட்டிகளில் மணீஷ் பாண்டே இந்திய அணியின், ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அதில் ஒன்றில் கூட இந்தியா தோல்வி அடைந்தது கிடையாதாம். இதனால் அவரை இந்திய அணியின் 'லக்கி' வீரராக ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து இருக்கின்றனர்.