'EXCUSE ME.. வாட் ஈஸ் தி புரொசிஜர்?'.. HEAD COACH-க்கு BCCI முன்வைத்துள்ள 'தகுதிகள்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 17, 2019 10:37 AM
பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கான தலைமையை பயிற்சியாளர் பொறுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியாகின. இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதி வரை சென்று, தோல்வியுற்றது. அதன் பிறகு இறுதிப்போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்கிற முறையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.

மொத்தமாக இந்த டோர்னமெண்ட்டில் தோனியின் பெர்ஃமார்மென்ஸ், சச்சினின் விமர்சனம், சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் கமெண்ட்ரி, தோனியின் ரன் - அவுட், பென் ஸ்டோக்ஸின் பவுண்டரி என பல விஷயங்கல் விவாதத்துக்குள்ளாகின. இந்த நிலையில் உலகக் கோப்பை முடிந்த பின் தோனியின் ஓய்வுக்கு அடுத்த ஹாட் டாப்பிக்காக பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவி இருந்து வருகிறது.
தற்போது இருக்கும் ஒப்பந்த பயிற்சியாளர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடன் மோதவுள்ள மூன்று டி20, மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்ததும் பணியில் இருந்து விடைபெற்றுவிடுவார். அதன் பின்னருக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குத்தான் தற்போது விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கான தகுதிகளாக, குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் தேசிய அளவிலான டெஸ்ட் மேட்ச்களில் பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும், ஐபிஎல் போன்ற சர்வதேச அளவிலான ஒப்பந்த லீக் கிரிக்கெட் நிர்வாகத்தின் சான்றிதழ் பெற்ற இணை உறுப்பினராக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும், 30 டெஸ்ட் மேட்ச்களிலும், 50 ஒருநாள் போட்டிகளிலும் விளையாண்டிருக்க வேண்டும், 60 வயதுக்குக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்கிற விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகுதிகளுடன் பிசிசிஐ இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஜூலை 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதுமட்டுமல்லாமல், தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாய் இருந்தால் கூட திரும்பவும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
