‘ஐசிசி உலகக் கோப்பை அணி பட்டியல்’... ‘இடம் பிடித்த இரு இந்திய வீரர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 15, 2019 10:54 PM

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட அணியை, ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Rohit, Bumrah feature in ICC\'s Team of the Tournament

2019 உலகக் கோப்பைப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுபெற்றது. பரபரப்பாக நடைப்பெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் உலகக் கோப்பையின் ஐசிசி அணிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் தலைமையிலான இந்த அணியில், ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.