‘பைனல்ல யாருமே தோக்கல’ ஆனா... தோல்வி குறித்து வில்லியம்சன் சொன்ன சூப்பர் பதில்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 16, 2019 04:32 PM
உலகக்கோப்பையில் தோல்வி அடைந்தது குறித்து நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன்வில்லியம்சன் மனம் திறந்துள்ளார்.

12 -வது சீசன் உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்து நாட்டில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இதில் லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டி முதலில் டிராவில் முடிந்தது. இதனை அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் போட்டி டிரா ஆனது. அதனால் அதிக பவுண்டரிகள் எடுத்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இங்கிலாந்து அணி மொத்தமாக 24 பவுண்டரிகளும் (2 சிக்ஸர் உட்பட), நியூஸிலாந்து அணி மொத்தமாக 16 பவுண்டரிகளும் (2 சிக்ஸர் உட்பட) எடுத்திருந்தன. இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு சென்றது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் தோல்வி குறித்து தெரிவித்த நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், ‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யாரும் தோற்கவில்லை. கோப்பை ஒரு அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்’ என தெரிவித்துள்ளார். இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகரன்கள்(578) எடுத்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
