'தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி'... 'பும்ராவின் வைரல் ட்வீட்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 15, 2019 08:45 PM

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பௌலிங்கை, இமிடேட் செய்த பாட்டியின் வீடியோவைப் பார்த்து, பும்ரா ட்வீட் செய்துள்ளார்.

Old lady mimics Jasprit Bumrah’s bowling action

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சு பாணி வித்தியாசமானது. அவரது பந்து வீச்சு பாணியை இளைஞர்கள் பின்பற்றுவது வழக்கமான ஒன்று. பும்ரா பந்து வீசுவது போன்று கேப்டன் விராட் கோலி கூட, பந்துவீச முயன்ற வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 74 வயதான மூதாட்டி ஒருவர், பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோ கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் கவனத்திற்குச் சென்றது. அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், ‘இது எனது நாளை சிறப்பித்தது’ என்று குறிப்பிட்டு ஷேர் செய்து பாராட்டியுள்ளார்.