இவர் இல்லாத ஒரு டீமா..? ‘சச்சின் தேர்வு செய்துள்ள அணியால்..’ அதிருப்தியில் ரசிகர்கள்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 16, 2019 04:55 PM
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து.

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு ஐசிசி உலக அணி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் இந்திய வீரர்கள் ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியின் கனே வில்லியம்ஸன் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல சச்சினும் தனது உலக லெவன் அணியைத் தேர்வு செய்துள்ளார். இவருடைய அணியிலும் கனே வில்லியம்ஸனே கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 பேர் கொண்ட அணிக்கு இந்தியாவிலிருந்து 5 வீரர்களைத் தேர்வு செய்துள்ளார் சச்சின். ஆனால் இதில் இந்தியாவின் அனுபவம் மிக்க வீரரான தோனி தேர்வு செய்யப்படவில்லை. இது இந்திய ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் தேர்வு செய்துள்ள உலக அணி
1.ரோஹித் ஷர்மா (இந்தியா)
2.ஜானி பேரிஸ்டோ (விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து)
3.கனே வில்லியம்ஸன் (கேப்டன்) (நியூசிலாந்து)
4.விராட் கோலி (இந்தியா)
5.சஹிப் அல் ஹசன் (வங்கதேசம்)
6. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
7.ஹர்திக் பாண்ட்யா (இந்தியா)
8. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
10. ஜஸ்பிரிட் பும்ரா (இந்தியா)
11. ஜோஃப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து)
