உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு மீண்டும்.. ‘ஷேவாக்கைச் சீண்டியுள்ள இங்கிலாந்து பிரபலம்..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Jul 16, 2019 06:29 PM
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து டிவி பிரபலம் பியர்ஸ் மோர்கன் ஷேவாக்கின் பழைய ட்வீட் ஒன்றிற்கு பதிலளித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பியர்ஸ் மோர்கன் ட்விட்டரில், “1.2 பில்லியன் மக்கள்தொகை உடைய இந்திய நாடு தோற்றுப்போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது?” என 2016ஆம் ஆண்டின் செய்தி ஒன்றைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். அதற்கு அப்போது ஷேவாக், “நாங்கள் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடுபவர்கள். ஆனால் கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலகக் கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது அவமானம் இல்லையா?” என பதிலடி கொடுத்திருந்தார்.
We cherish every small happiness',
But Eng who invented Cricket,&yet2win a WC,still continue to playWC.Embarrassing? https://t.co/0mzP4Ro8H9
— Virender Sehwag (@virendersehwag) August 24, 2016
உலகக் கோப்பையில் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து ஷேவாக்கின் இந்த பழைய ட்வீட்டைக் குறிப்பிட்டு மோர்கன், “ஹாய் நண்பா” எனத் தற்போது மீண்டும் அவரைச் சீண்டியுள்ளார். இதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல எனக் கிண்டல் செய்து மோர்கனை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
Hi mate @virendersehwag. https://t.co/50X5YMQSQU
— Piers Morgan (@piersmorgan) July 15, 2019
