SURYA KUMAR YADAV SPOOF : எங்க.. சிரிப்ப கன்ட்ரோல் பண்ணுங்க பாப்போம்...😅 இணையத்தை கலக்கும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற்று வரும் நிலையில், விறுவிறுப்பான இறுதி கட்டத்தையும் எட்டி விட்டது.

முதலாவது அரை இறுதியில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, கடைசி ஓவரின் முதல் பந்தில் வெற்றி இலக்கை அடைந்து மூன்றாவது முறையாக டி 20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக, சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது பாகிஸ்தான் அணி. இதனால் அரை இறுதி வாய்ப்பு சற்று நெருக்கடி ஆன நிலையில், தொடர்ந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதுடன் மட்டுமில்லாமல் இறுதி போட்டிக்கும் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளனர்.
நாளை இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானை 13 ஆம் தேதியன்று சந்திக்கும். கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது. இதனால், நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை மீண்டும் சந்திக்குமா என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இதற்கு மத்தியில் கோலி மற்றும் சூர்யகுமார் ஆகிய இந்திய வீரர்களின் பேட்டிங்கையும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, சூர்யகுமார் தொடர்ந்து அதிரடியாக ஆடுவதுடன் மட்டுமில்லாமல் 360 டிகிரியிலும் சுழன்று சுழன்று பந்துகளை அடித்து வருகிறார். கிரீஸில் இருந்து சுற்றி சுற்றி அசராமல் ஷாட்களை அவர் அடிக்கும் நிலையில், பலரும் தொடர்ந்து சூர்யகுமாரை பற்றி தான் பேசி வருகின்றனர்.
அப்படி ஒரு சூழலில், சூர்யகுமார் ஆடுவது தொடர்பான Spoof வீடியோ ஒன்று, கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவில், நபர் ஒருவர் சூர்யகுமார் கிரிக்கெட் ஆடுவது போல கையில் பேட்டுடன் ஆடுகிறார். அதில், டீ குடித்தபடியும், ஸ்டம்பை விட்டு விலகி நடந்து சென்ற படியும், ஸ்டம்புக்கு பின்னால் சென்று கூலாக அடிப்பது போன்றும் பல ஷாட்கள் Spoof ஆக இடம்பெற்றுள்ளது. அதிலும் கடைசி ஷாட்டில் ஒரு ஸ்டம்பை எடுத்து அடிப்பது போல இருப்பது பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.
Surya Bhau nowadays:
Video credit : Chhote Miyan pic.twitter.com/UzZiQyeWhd
— Avinash Aryan (@AvinashArya09) November 8, 2022
Disclaimer : திறமைமிக்க வீரரான சூர்யகுமார் யாதவை புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. ஒரு Spoof கருத்தை மையப்படுத்தி தான் இந்த செய்தி உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
