ஹார்ட் பீட்டை எகிறவைத்த IND VS PAK மேட்ச்.. போட்டி முடிஞ்ச அப்புறம் கோலியை நெகிழ வச்ச கேப்டன் ரோஹித் ஷர்மா.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
![India won the match against pakistan Rohit celebration India won the match against pakistan Rohit celebration](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/india-won-the-match-against-pakistan-rohit-celebration.jpg)
இந்த வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மேல்போர்னில் நடைபெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து பாகிஸ்தான். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் மற்றும் பாண்டியா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். அதன்பிறகு உள்ளே வந்த கோலி நிலைத்து ஆடினார். மறுபுறம் சூரியகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேற பாண்டியா உள்ளே வந்தார். இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் பலனாக இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியளித்தார். 40 ரன்கள் எடுத்திருந்த பாண்டியா வெளியேறிய நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், 1 ரன்னில் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார்.
இதனால் மைதானமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது. இறுதி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அஷ்வின் அதனை சரியாக அடித்து கொடுக்க இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. கோலி அபாரமாக ஆடி 82 ரன்கள் குவித்தார். 53 பந்துகளை சந்தித்திருந்த கோலி 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசினார்.
இந்நிலையில், வெற்றியால் இந்திய அணியினர் உற்சாகமடைந்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, மைதானத்திற்குள் ஓடிவந்து கோலியை தோள்மீது தூக்கி கொண்டாடினார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#ViratKohli - #RohitSharma celebrations😍😍😍😍😍😍#INDvPAK pic.twitter.com/oBRtYfefjl
— Siva Harsha || S/H 🤙🎥 (@SivaHarsha_1) October 23, 2022
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)