19 வருஷத்துல முதல் தடவை.. நெருங்கும் SEMI FINALS.. தோனிய தொடர்பு படுத்தி வெளியான சுவாரஸ்ய தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
Also Read | இத எல்லாம் எப்பவோ பண்ணிட்டாரு".. 8 வருசத்துக்கு முன்னாடியே சூர்யகுமார் அடிச்ச அடி.. வைரல் சம்பவம்!!
ஆஸ்திரேலியாவில் வைத்து டி 20 தொடர் ஆர்மபமான நாள் முதல், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பு நிறைந்து தான் நடந்து வந்தது.
இதனால், சூப்பர் 12 சுற்று முடிவது வரை எந்தெந்த அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ள கடும் விறுவிறுப்பு தான் ரசிகர்களுக்கு காத்திருந்தது.
இறுதியில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. இதில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதலாவது அரை இறுதி போட்டியில் மோதி இருந்தது. இதில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான் மூன்றாவது முறையாக டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், அரை இறுதிக்கு முன்னேறுவது கடினமான ஒன்றாக மாறி இருந்தது. ஆனால் அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தற்போது இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து, நாளை (10.11.2022) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரை இறுதியில் வெற்றி பெறும் அணி, பாகிஸ்தானை இறுதி போட்டியில் சந்திக்கும்.
இதற்கு மத்தியில், கடந்த 19 ஆண்டுகளில் தோனி இல்லாமல், ஐசிசி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆட போகும் முதல் நாக் அவுட் இதுவாகும். முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனி, இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களை இந்திய அணி வென்ற போது தோனி தான் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.
மேலும் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பைத் தொடரின் அரை இறுதி போட்டியில் தோனி ஆடி இருந்தார். இதன் பின்னர், இந்திய அணியும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டியில் முன்னேற்றம் காணவில்லை. தொடர்ந்து, தற்போது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அரை இறுதிக்கு முன்னேற்றம் கண்டுள்ளதால் தோனி இல்லாமல் இந்திய அணி ஆடும் முதல் ஐசிசி நாக் அவுட் போட்டியாகவும் இது மாறி உள்ளது.
இதனால்; 2007 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியை போல இந்த முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்த வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.
Also Read | "கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த மனுஷன்".. கொஞ்ச நாளில் மாறுன கோடீஸ்வர இளைஞர் வாழ்க்கை..