INDIA VS PAKISTAN மேட்ச்ல கவனம் ஈர்த்த பாகிஸ்தானை சேர்ந்த கோலி ரசிகை.. கைல வச்சிருந்த வேற லெவல் போஸ்டர்.. வைரல் PIC..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த விராட் கோலியின் ரசிகை ஒருவர் வைத்திருந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

Also Read | ஆஹா அடுத்து ஸ்டாண்ட் அப் காமெடி.. அதுவும் அவர்கூடயா..? எலான் மஸ்க் போட்ட பதிவு.. பத்திகிட்ட ட்விட்டர்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் துவங்கியது. குரூப் ஏ வில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும், குரூப் பி யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருக்கின்றன. லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணியை வீழ்த்தி க்ரூப் 4 சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்தியா - பாகிஸ்தான்
துபாயில் நேற்று இரவு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித் - ராகுல் களத்தில் இறங்கினர். பவர்பிளே ஓவர்களில் அடித்து ஆடிய இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்க, இந்திய அணியின் விராட் கோலி நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 60 ரன்கள் எடுத்த நிலையில் கோலி அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி சேஸிங்கை துவங்கியது. கேப்டன் பாபர் அசாம் 14 ரன்னிலும், அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால், பின்னர் களமாடிய முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது நவாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Credit : Twitter
கவனம் ஈர்த்த பாகிஸ்தான் ரசிகை
ஓய்வுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்த விராட் கோலி மீதான ஆர்வம் ரசிகர்களிடையே மிக அதிகமாக இருந்தது. ஹாங்காங் அணியுடன் அரைசதம் விளாசிய கோலி, நேற்றைய போட்டியிலும் சிறப்பாகவே விளையாடினார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், நேற்றைய போட்டியை காண வந்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் கையில் வைத்திருந்த போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அதில்,"நான் விராட் கோலிக்காகவே இங்கு வந்திருக்கிறேன்" என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
