சிக்ஸர், பவுண்டரி'ன்னு விளாசிய சூர்யகுமார்.. அவர பாத்து 'கோலி' செஞ்ச விஷயம்.. "அட, அவரே அப்டி பண்ணிட்டாரா?!".. செம வைரல் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஆசிய கோப்பை நடைபெற்று வரும் நிலையில், லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

மொத்தம் ஆறு அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு குரூப்பில், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராகவும் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மறுபக்கம், பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளை வீழ்த்திய இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியின் போது, விராட் கோலி செய்த செயல் தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஹாங்காங் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் மெல்ல மெல்ல ரன் சேர்த்து கடைசி கட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தது. அதிலும் குறிப்பாக, விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தி இருந்தது. இதில், சிக்ஸர் மற்றும் பவுண்டரி என ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யகுமார், 26 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் அடித்திருந்தார்.
அதிலும், ஹாங்காங் வீரர் ஹாரூன் அர்ஷாத் வீசிய கடைசி ஓவரில், 4 சிக்ஸர்களுடன் 26 ரன்களை சேர்த்திருந்தார் சூர்யகுமார். இதனால், இந்திய அணியும் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அப்படி ஒரு சூழ்நிலையில், சூர்யகுமாரின் அதிரடியை பார்த்த சக பேட்ஸ்மேன் விராட் கோலி, அவரது ஆட்டத்திற்கு தலை வணங்கும் வகையில் நெஞ்சில் கை வைத்து குனிந்து வாழ்த்தினார்.
சீனியர் வீரரான கோலி, சூர்யகுமாரை பார்த்து இப்படி தலை வணங்கியது தொடர்பான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
Even the king should bow 🙇 for him👑💙@surya_14kumar pic.twitter.com/6YzmiijP6A
— Vamsi Krishna (@vamsikrishna_17) August 31, 2022
பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
