VIDEO : சூர்யகுமாரை பங்கமா கலாய்ச்ச ரோஹித்.. "அதுலயும் ஒரு போஸ் கொடுத்தாரு பாருங்க"!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Oct 20, 2022 03:19 PM

டி 20 உலக கோப்பைத் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவில் வைத்து ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Rohit sharma hilarious reaction for suryakumar pose in airport

Also Read | கடற்கரையில் நடந்துட்டு போயிட்டு இருந்தப்போ.. நீரில் பெண் பார்த்த உருவம்.. "டைனோசர் தல மாதிரியே இருக்குற உருவமா அது??".. மர்மம்!!

தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில், சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22 ஆம் தேதியன்று தொடங்குகிறது.

இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கும் ஏற்கனவே முன்னேறி இருந்தது.

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் மோதி இருந்த இந்திய அணி, த்ரில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டி மழை காரணமாகவும் கைவிடப்பட்டிருந்தது. மேலும், தங்களின் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி வரும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று சந்திக்கவுள்ளது.

Rohit sharma hilarious reaction for suryakumar pose in airport

கடந்த ஆண்டு, டி 20 உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக லீக் சுற்றில் இந்திய அணி மோதி இருந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, லீக் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறவும் வழி செய்திருந்தது. இதனால், இந்த முறை நிச்சயம் இந்திய அணி திட்டம் வகுத்து களமிறங்கும் என்றும் ரசிகர்கள் கருதி வருகின்றனர். அதே போல, இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.

Rohit sharma hilarious reaction for suryakumar pose in airport

இந்த நிலையில், சூர்யகுமாரை கலாய்த்து ரோஹித் சர்மா செய்யும் விஷயம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்தி, மிகவும் கடினமாகி இந்திய அணிக்குள் நுழைந்தவர் சூர்யகுமார் யாதவ். சமீபத்திய டி 20 தொடர்களில், தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் அசத்தலாக ஆடி வருவதால் டி 20 உலக கோப்பை தொடர் மீதும் அவரது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில், தான் செல்லும் விமான நிலையங்களில் எல்லாம் புகைப்படங்கள் எடுப்பதை சூர்யகுமார் வழக்கமாக கொண்டிருப்பதாக தெரிகிறது.

Rohit sharma hilarious reaction for suryakumar pose in airport

இதனை வைத்து சூர்யகுமாரை கலாய்த்த ரோஹித், அவர் விமான நிலையங்களில் நிற்பது போன்ற போஸ் கூட செய்து காட்டுகிறார். பார்த்த உடனேயே சிரிப்பை வரவழைக்க இந்த வீடியோ, கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

Also Read | "ஒரு உயிரை காப்பாத்திட்டோம்".. மாரடைப்பால் சரிந்த விவசாயி.. டக்குன்னு போலீஸ் அதிகாரி செஞ்ச உதவி.. சல்யூட் போட வைக்கும் வீடியோ..!

Tags : #CRICKET #ROHIT SHARMA #SURYAKUMAR YADAV #AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit sharma hilarious reaction for suryakumar pose in airport | Sports News.