VIDEO: என்னங்க, இங்க வந்த 'பந்த' காணோம்...! 'மின்னல் வேகத்தில் வந்த யார்க்கர்...' 'மிரண்டு போன பேட்ஸ்மேன்...' - தெறிக்க விட்ட ஸ்டார்க்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு ஓவரில் வீசிய பந்துவீச்சில் வெற்றி வாய்ப்பு பறிபோன சம்பவம் நேற்று நடந்துள்ளது.
நேற்று (28-10-2021) நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி மேட்ச் தொடங்கியதிலிருந்தே அடித்து ஆடியது.
இலங்கை அணியின் குசல் பெரேரா மற்றும் அசலங்கா ஆகியோர் 2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்து அசத்தினர். முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 80 ரன்களை கடந்த நிலையில், இப்படியே போனால் இலங்கை கண்டிப்பாக 190+ ரன்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இலங்கையின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிட்செல் ஸ்டார்க் 10வது ஓவரில் களமிறக்கப்பட்டார். ஸ்டார்க் வீசிய யார்க்கர் பால் தான் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பை தவிடு பிடியாக்கியது.
மிட்சல் ஸ்டார்க் வீசிய 10 ஓவரில் 2-வது பந்தில் குசல் பெரேரா சிக்ஸருக்கு விளாசினாலும், அடுத்த பந்தில் சுதாரித்துக்கொண்ட மிட்செல் ஸ்டார்க் மிகவும் அற்புதமான யார்க்கர் ஒன்றை வீசி குசல் பெரேரா எதிர்பார்க்காத வகையில் கால்களுக்கு இடையே மிடில் ஸ்டம்பை கழட்டி அவுட் ஆக்கினார்.
அதன்பின் வந்த வீரர்கள் யாரும் சரியாக ஆடாத காரணத்தால் 154 ரன்கள் எடுத்தனர். 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.
முதலில் இலங்கைக்கு தான் வெற்றி வாய்ப்பு என்று கருத்தப்பட்ட ஆட்டத்தில், மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரே ஒரு பந்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் தொடரையும் மாற்றிய சம்பவம் இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.